இம்முறை அரச வானொலி விருது விழாவில் மலையகத்தைச் சேர்ந்த ஒரு சின்னஞ்சிறிய சின்னப்பெண்ணொருத்திக்கும் “சிறந்த வானொலி நாடக நடிகைக்கான(சிறுவர்) விருது கிடைத்திருக்கிறது.வரவேற்கத் தக்க விஷயம்.
ஊவா சமூக வானொலியில் ஓர் அறிவிப்பாளரும்..ஒருசில நிகழ்ச்சிகளுக்கு தயாரிப்பாளராகவும் இருக்கும் திரு.ருக்ஷன்(தேவருக்ஷன்) அவர்களின் செல்வப்புதல்வி தான் இந்த தேமிஷா.
தாய் 8அடி பாய்ந்தால் பிள்ளை 16அடி பாயும் என்பதற்கு இது சரியான உதாரணம்.திரு.ருக்ஷன் அவரும் சகலகலா வள்ளவர்.
தந்தையும் மகளும் வாழும் மலையகத்தின் ஒரு ஏழை குடும்பத்தில் இந்த ON LINE CLASS முறை காட்டிய ஒரு கோர தாண்டவத்தையே இந்த நாடகம் எடுத்துக் காட்டியுள்ளது.
இந்த நாடகத்தை நெறியாள்கை செய்ததோடு மட்டுமல்லாமல் தன்மகளோடு நடித்தவரும் இந்த ருக்ஷன் தான்.
தந்தைக்கும் மகளுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
இதை எல்லாம் இந்த மாகணத்தைச் சேர்ந்தவரும்..ஊவா மாகாண சபையைச் சேர்ந்தவர்களோ..நலம் விரும்பிகளோ..இலக்கிய சார்பாயுள்ள அமைப்புகளோ..சங்கங்களோ கண்டு கொள்வதில்லை.
விஷேடமாக இந்த மாகாணசபை தமிழர்களைக் கண்டு கொள்வதே இல்லை.பெரும்பான்மையை மட்டுமே உயர்த்திப்பேசும்.பதாதைகள் போடும்.பாராட்டி கௌரவிக்கும்.இங்குள்ள இலக்கியச்சங்களும் அமைப்புக்களும் கூட அரசியலின் பின்னுக்கே போய் தமது நிலையைத் தக்கவைத்துக் கொள்ளும் துர்ப்பாக்கியநிலை.
இச்சங்களைப்பற்றி எழுதவே என் கரங்கள் வெறுப்படைகின்றன.
பசறையூர்-ஏ.எஸ்.பாலச்சந்திரன்.
நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்