எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை “சர்வதேச நாடக அரங்கியல் தினம்” என்பதை முன்னிட்டு கண்ணகி கலாலயம் கலைஞர்கள் சங்கமும் ஐக்கிய தேசிய சுயத்தொழில் வியாபாரிகள் கலையரண் கலைஞர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “நாடக அரங்கியல் பயிற்சி பட்டறை” கொழும்பு கொட்டாஞ்சென்னை காலிமுத்து நகரசபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
காலை 8.30 முதல் மாலை 5.30 வரை இந்நிகழ்வு முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்புவோர் முற்பதிவு செய்து கொள்ள 0767111752, 0767111752, 0775282838 என்ற இலக்கத்துடன் இணைந்துக்கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
அன்றைய தினம் பொட்டம் நீட்ட காட்சட்டை மற்றும் டி சர்ட் அணிந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளதால் அவற்றையும் குறிப்புக்காக ஓர் அப்பியாச கொப்பி பேனையுடன் வருகை தரவும்.
கண்ணகி கலாலயத்தை பொறுத்த வரை பலருக்கு சந்தர்ப்பங்களும், சன்மானங்களும் ஊதியங்களும் பெற்றுக்கொடுத்துள்ளது.
இதற்கு சிறப்பான வழியமைக்கும் நோக்கிலேயே இந்த பயிற்சி பட்டறை.
உங்களுக்கும் வழி காட்டலுடன் சந்தர்ப்பம்.
நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்