அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே மேடையில் விருதுகள்
பொதுவாகவே ஒரே துறையில் அண்ணனும் தம்பியும் இருந்தாலும் இருவரின் திறமைக்கும் அங்கீகாரம் கிடைப்பது கிடையாது.
அப்படி ஒரு துறையில் இருக்கும் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே மேடையில் விருதுகள் கிடைத்துள்ளது.
அன்மையில் நடைபெற்ற SLIM விருது வழங்கும் விழாவில் சகோதரர்களான சந்தன சூரியபண்டார மற்றும் சத்தா மங்கள சூரியபண்டார இருவருக்கும் விருதுகள் கிடைத்தது.
சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருதை சிரச டிவியில் ஒளிபரப்பாகும் லக்ஷபதி நிகழ்ச்சிக்காக சந்தன சூரியபண்டார பெற்றுக்கொண்டார்.
அதே போல் அவரது சகோதரரான சத்தா மங்கள சூரியபண்டார சிறந்த தொலைக்காட்சி நாடகத்திற்கான விருதை சுவர்ணவாஹினியில் ஒளிபரப்பாகும் நாடகம்காரையோ நாடகத்திற்காக பெற்றுக்கொண்டார்.
இரு சகோதரர்களுக்கும் நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்.