இன்று கொழும்பில் இடம்பெற்ற வானொலி அரச விருது விழா 2022 இல் பல வானொலி ஊழியர்களுக்கு விருதுகள் கிடைத்தது.
அந்த வரிசையில் பல திறமைசாலிகள் தங்கள் திறமைக்கு விருது கிடைத்ததை கொண்டாடி வருகிறார்கள்.
2022 வானொலி அரச விருது விழாவில் தமிழ் FM 04 விருதுகளை சுவீகரித்துள்ளது.
சிறந்த நிகழ்ச்சி ஆரம்பக் குறியிசைக்கான விருது தமிழ் FM இன் Good Morning தமிழா நிகழ்சிக்காக தமிழ் FM இன் பணிப்பாளர் ஹோஷியா அனோஜனுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
சிறந்த பெண் செய்தி வாசிப்பாளருக்கான விருது கிரிஜா தியாகராஜாவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. சிறந்த வானொலி நடிகருக்கான விருது தமிழ் FM அறிவிப்பாளர் கவிராஜ் பேரின்பராஜா பெற்றுள்ளார்.
(காத்துவாக்குல ஒரு காதல் வானொலி நாடகத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது)சிறந்த நிலையக்குறியிசைகளிற்கான விருதும் தமிழ் FM ற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
தமிழ் FM ஆரம்பித்து மிகக் குறுகிய காலப்பகுதியில் அரச வானொலி விருது விழாவில் கலந்துகொண்டு விருதினையும் ஊக்குவிப்பு சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்வதில் பெருமிதமடைகின்றது.எமது வெற்றிப் பயணம் தொடரட்டும் உங்கள் இறுக்கமான பிணைப்புடன் நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்.