இன்று கொழும்பில் இடம்பெற்ற வானொலி அரச விருது விழா 2022 இல் பல வானொலி ஊழியர்களுக்கு விருதுகள் கிடைத்தது.
அந்த வரிசையில் பல திறமைசாலிகள் தங்கள் திறமைக்கு விருது கிடைத்ததை கொண்டாடி வருகிறார்கள்.
இந் நிலையில் வானொலி அறிவிப்பாளரும் கவிஞருமான ரிழா தனது முகப்புத்தக பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
விருதுக்கு….
எல்லோராலும்
நேசிக்கப்படும் என்னை
உங்களால் மட்டும்
எப்படி தட்டிக்கழிக்க முடிகிறதோ ?
தரமாட்டார்கள்
தரவேமாட்டார்கள்
அனுப்பக்கூடாது
இனி
அனுப்பவே கூடாது
அவர்கள்
விருப்ப பட்டியலில்
நான் இல்லை
அதனால்
விருது எனக்கு இல்லை
நேர்மை
திறமை
தர்மம்
என்றாவது ஒருநாள் வெல்லும்
அதுவரை காத்திருக்கிறேன்
21.3.2022
ரிழா உங்கள் திறமைக்கு நிச்சயமாக விரைவில் விருது கிடைக்கும்.உங்களுக்கு பக்க பலமாக என்றும் நாம் இருப்போம்.
நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்