நிகழ்ச்சி பெயரில் சர்ச்சை | பொங்கியெழுந்த ஹிஷாம்

நாம் அறிந்தவரை தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் பல திறமைசாலிகள் இருக்கிறார்கள்.

ஆனால் அதில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே பிரகாசித்துள்ளார்கள்.

அதில் வானொலி மற்றும் தொலைக்காட்சி என்ற இரு ஊடகங்களிலும் பிரகாசித்து தேசிய விருதை பெற்றவர் ஹிஷாம் மொஹமட் .

அன்மையில் யாழ் மற்றும் கொழும்பை மையமாக கொண்டு செயற்பட்டு வரும் தனியார் ஊடகம் ஒன்று பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

அந்த நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட பெயர் ஏற்கனவே வர்ணம் டிவியில் 8 வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் பெயர் என்பதால்
இது தொடர்பாக தனது அதிருப்தியை ஹிஷாம் முகப்புத்தகத்தில் மூலம் தெரிவித்துள்ளார்.

Varnam TV மாண்புறு மங்கை பெண்களுக்கான வெற்றிகரமான செயலமர்வுகளை நாட்டின் பல பாகங்களிலும் நடாத்தி 8 வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. இன்றும் பெண்களுக்கான ஒரு செயலமர்வுக்கு பெயரை கூட புதிதாக சிந்திக்க முடியாமல் அதை அப்படியே நகல் எடுத்து நடாத்துகிறார்கள். பல வருடங்களுக்கு முன்னே வர்ணம் தெலைக்காட்சி வெற்றிகரமாக செயல்படுத்தியதை இப்போதும் அப்படியே பின்பற்றுகிறார்களே என்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

வர்ணம் தெலைக்காட்சியின் மாண்புறு மங்கை செயலமர்வின் வெற்றியில் எத்தனையோ பேர் தங்கள் கடின உழைப்பையும் வியர்வையையும் சிந்தியிருக்கிறரார்கள்.

Be Inspired But Don’t Copy!

அன்புள்ள KC Pragash, குறித்த செயலமர்வை புதிய பெயரோடு புதுமைகளை சேர்த்து உங்கள் ஊடகத்திற்கான தனித்துவமான ஒரு அடையாளமாக்குங்கள்.

அனுபவங்கள் போல நல்ல ஆசான் இல்லை A L Jaffeer Jaffeer, S.T. Rauf போன்ற ஊடகத்தில் நீண்ட கால அனுபவமும் தேர்ச்சியும் கொண்டவர்களை பெற்றிருக்கிறீர்கள் அவர்களின் ஆலோசனைகளை வழிகாட்டுதல்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். Traditional Media பெரும் சவால்களை எதிர்நோக்கும் Digital காலத்தில் முன்னோக்கி நகர புதிய அனுகுமுறைகளை கையாளுங்கள்.

அரச விருதுகளை வென்ற சிறப்பான இளம் அணியினருக்கும் உங்கள் ஊடகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இனி சரி ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்தால் சரி……

லங்காடாக்கீஸ் இணையத்தில் வெளிவரும் எம் சினிமா மற்றும் கலையுலக செய்திகளை சில இணையத்தளங்கள் Copy செய்து அவர்களது தளங்களில் பதிவிடுகின்றன . போலிகளை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!