Rap Ceylon படைப்புக்கள் எப்போதும் எம்மை வியப்பில் ஆழ்த்த தவறியதில்லை. அந்த வகையில் அவர்களின் அண்மைய வெளியீடாக வந்திருக்கும் “ஆழி” பாடல் கூட அசத்தல் தான்.
திஷோன் விஜயமோகன் இசையில் வாகீசன் ராசையாவின் வரிகளில் உருவான இந்தப்பாடலை வாகீசனுடன் இணைந்து சுந்தரலிங்கம் கஜந்தினி பாடியுள்ளார்.
காணொளிப்பாடலாக வெளியாகியுள்ள இந்தப்பாடலில் அட்விக் மற்றும் சுபத்திரா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளதுடன், அவர்களுடன் திஷோன் மற்றும் வாகீசனும் தோன்றியுள்ளனர்.
ஈழத்தின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரிஷி செல்வம் இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் நிறச்சேர்க்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் மணிவண்ணன் படத்தொகுப்பு பணியைப் புரிந்துள்ளார். இந்தப் பாடலையும் தேனுசன் தயாரித்துள்ளார்.
Music & Vocal : Thishon Vijayamohan
Rap & Lyrics : Vaaheesan Rasaiya
Female Artist : Gajanthini
Cast : Subathra | Advik
Shot & DI : Rishi Selvam
Edit : Mani Vannan
Producer : Thenushan
Publicity Designer : Mathus Jm
லங்காடாக்கீஸ் இணையத்தில் வெளிவரும் எம் சினிமா மற்றும் கலையுலக செய்திகளை சில இணையத்தளங்கள் Copy செய்து அவர்களது தளங்களில் பதிவிடுகின்றன . போலிகளை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள்.