‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ திரைப்படத்தில் பணியாற்றிவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் படக்குழுவினரின் நன்றி கூறும் நிகழ்வும் நேற்று (புதன்கிழமை) இரவு யாழ். திவ்யமஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
படத்தில் பணியாற்றியவர்களுக்கான கௌரவிப்புக்களும், பட உருவாக்கத்திற்கு உறுதுணையாக செயற்பட்டவர்கள், ஆதரவு அளித்தவர்களுக்கு நினைவு பரிசில்கள் வழங்கி நன்றியும் கூறப்பட்டது.
கடந்த வருட இறுதியில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் வெளியான “புத்திகெட்ட மனிதர் எல்லாம்“ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இலங்கைத் தமிழ் சினிமாவின் வணிக ரீதியான வெற்றிக்கு இந்தப் படம் மிகப்பெரும் தூண்டுகோளாகும். பல இளம் படைப்பாளிகளுக்கு இத்துறை சார்ந்த நம்பிக்கையை விதைத்துச் சென்றிருக்கின்றது.
இந்த திரைப்படத்திற்கு 13 ஆவது நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் 4 விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த நடிகை (சிந்துஜா), சிறந்த ஒளிப்பதிவாளர் (தர்மலிங்கம்), சிறந்த இசையமைப்பாளர் (பூவன் மதீசன்), சிறந்த திரைக்கதை (சிவராஜ்) ஆகிய விருதுகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
லங்காடாக்கீஸ் இணையத்தில் வெளிவரும் எம் சினிமா மற்றும் கலையுலக செய்திகளை சில இணையத்தளங்கள் Copy செய்து அவர்களது தளங்களில் பதிவிடுகின்றன . போலிகளை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள்.