இன்பம் அருளையாவின் வரிகளில் விஷ்வ பிரசன்னா குருக்களின் குரலில் பிரியன் தம்பிராஜாவின் இசையில் சிவராத்திரி நன்னாளில் வெளியாகியிருக்கின்றது “சிவாஞ்சனம்” பாடல்.
காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலுக்கான நடன அமைப்பை துரைசிங்கம் வாகீஷன் மற்றும் ஜீ.ஜீவிதன் ஆகியோர் மேற்கொண்டிருக்கின்றனர். பாடலுக்கான கலை இயக்கம் சி.துஷிகரன், ஒப்பனை ரிஷிவர்மன், உடை அலங்காரம் வாகீஷன், சோபனா சுதாகரன்.
பாடலுக்கான ஒளிப்பதிவை வற்சு மேற்கொண்டிருப்பதுடன், ஒளி அமைப்பை நிலுஜனும் வடிவமைப்பை மொறிஸூம் கவனித்திருக்கின்றார்கள்.
படைப்பாளிகள் உலகம் சார்பில் ஐங்கரன் கதிர்காமநாதன் தயாரித்திருக்கும் இந்தப் பாடலை ரா.காந்தரூபன் இயக்கியுள்ளார்.
பாடலில் நடனக் கலைஞர்களாக (ஆற்றுகையாளர்கள்) கோகுலன், ரிஷிவர்மன், ஜீவிதன், பானுராஜ், நிந்துஜன், குலேந்திரன் அபிஷா, கதியரசன் கோகிலதர்சா, தயாநிதி கவிவர்ஜினி, கிக்ஷா சிவகாமிநாதன், மயூரிகா ஜீவம், டிசானு கனிபாகரன், திரிஷிகா றஜிதன், துஸ்யந்தினி சிவனேஸ்வரன், றஜீபன் அபிநயா, கணேஷ்வரன் அபிசியா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
லங்காடாக்கீஸ் இணையத்தில் வெளிவரும் எம் சினிமா மற்றும் கலையுலக செய்திகளை சில இணையத்தளங்கள் Copy செய்து அவர்களது தளங்களில் பதிவிடுகின்றன . போலிகளை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள்.