நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் 04 விருதுகளைத் தட்டிக் கொண்ட “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படம்
உலகத் தமிழ்த் திரைப்படைப்பாளிகளைக் கௌரவிக்கும் நோர்வே தமிழ்த் திரைப்பட விழா – தமிழர் விருது 2022 இல், ஈழத்தில் இருந்து வெளியான “புத்தி கெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படத்துக்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன.
சிவராஜ் இயக்கத்தில் கடந்த வருட இறுதியில் வெளியான “புத்திகெட்ட மனிதர் எல்லாம்“ திரைப்படம் இலங்கைத் தமிழ் சினிமாவின் வணிக ரீதியான கதவுகளை சற்று அகலத் திறந்த திரைப்படம் எனலாம். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரைப் பெற்ற இந்த திரைப்படத்திற்கு 13 ஆவது நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் 4 விருதுகள் கிடைத்தமை படக்குழுவினரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.
அந்த வகையில் சிறந்த நடிகை (சிந்துஜா), சிறந்த ஒளிப்பதிவாளர் (தர்மலிங்கம்), சிறந்த இசையமைப்பாளர் (பூவன் மதீசன்), சிறந்த திரைக்கதை (சிவராஜ்) ஆகிய விருதுகள் கிடைத்தன.