தர்ஷன ருவன் திசாநாயக்கவின் இயக்கத்தில் சிங்களத்தில் உருவாகியுள்ள கோவி தாத்தா படம் யாழிலும் வெளியிட தீர்மானித்துள்ளார்கள்.
இந்த படம் தமிழ் மொழிபெயர்ப்புடன் யாழில் வெளியாகவுள்ளது.வடக்கில் உள்ள விவசாயிகளுக்காக இந்த படம் நாளைய தினம் யாழில் வெளியிடப்படவுள்ளது.
ஒரு இசையமைப்பாளர் முதற்தடவையாக படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
தெற்கு விவசாயி தந்தையின் நிலை வடக்கு விவசாயிக்கு புரிய வேண்டும் என இயக்குனர் சொல்கிறார்.
இன்று இந்த படத்தின் படக்குழுவினர் கலந்துகொண்ட ஊடக சந்திப்பு யாழில் நடந்தது.
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சுலக்ஷன் அசோகன் படம் தொடர்பான விடயங்களை பகிர்ந்தார் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்