தடம் அமைப்பின் ஏற்பாட்டில் இளம் திரைத்துறை சார்ந்த படைப்பாளிகளின் திறமைகளுக்கு களம் கொடுக்கும் முகமாக தேசிய ரீதியில் வெளிப்படையாக நடைபெற்ற குறும்பட போட்டியில் பல்வேறு மாவட்டங்களின் சார்பாக போட்டியிட்ட 37 குறும்படங்களில் தெரிவுசெய்யப்பட்ட 06 குறும்படங்களின் தயாரிப்புக் குழுக்களுக்கான திரைத்துறைசார்ந்த இருநாள் வதிவிடப் பயிற்சிப்பட்டறையானது யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமாகியது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாநகரசபை முதல்வர் திரு.வி.மணிவண்ணன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைநெறிகள் பிரிவின் தலைவர் கலாநிதி திரு.எஸ்.ரகுராம் அவர்களும் – கௌரவ விருந்தினராக யாழ் மாவட்டத்திற்கான கலாச்சார உத்தியோகத்தர் திரு.ஆர்.கிருஸ்ணகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இப்பயிற்சியானது இன்றைய தினமும் நடைபெறவுள்ளதுடன் – கொழும்பு – பதுளை – பொகவந்தலாவை – மன்னார் – வவுனியா – யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு மாவட்டங்கள் சார்பாக பயிற்சியாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.