ஏன் ? எதற்கு ? – என் பதில்கள் – ARV லோஷன்
ஒரு மாத காலமாக என்னிடம் கேட்கப்பட்டுவரும் கேள்விகளுக்கான எனது பதில்கள்.. விரிவாக பதில்கள் என்ற லோஷனின் முகப்புத்தக பதிவு பல விடயங்களை சொல்லி இருக்கிறது.
சூரியனில் பல வருடங்களாக பணிப்பாளராக இருந்த லோஷன் கடந்த நவம்பர் முதலாம் திகதி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்தார்.
அதனை நிறுவன தலைவர் ஏற்றுக்கொண்டார்.அந்த தினத்தில் இருந்து கிட்டத்தட்ட 90 நாட்கள் தொழில் விதிமுறைகளுக்கமைய கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை கடமையில் இருந்து விடைபெற்றார்.
அவர் தற்போது வெளியிட்டுள்ள காணொளி பேரதிர்ச்சியான காணொளியாக உள்ளது.
அதுவும் இதுவரை காலம் எந்த சூரியனில் இருந்து விலகியவர்களில் நிறுவனத்துடன் எந்த பகையுமில்லாமல் விலகியவர் தான் மட்டுமே என்பதையும் விளக்கமாக கூறியுள்ளார்.
அதேபோன்று சூரியனில் பணிப்பாளர் என்ற உச்ச அந்தஸ்து தனக்கு மட்டுமே கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பல விடயங்கள் கூறியுள்ளார் நீங்களே கொஞ்சம் கேளுங்க