தேனி சஞ்சிகை மற்றும் இணையதளத்தின் ஆசிரியர் அமரர் கணேஷ் கெங்காதரன் (ஜெமினி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் புங்குடுதீவு 6ம் வட்டாரத்தில் இடம்பெற்றது.
இதன்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) ஜெர்மன் கிளையின் சுமார் 60,000 ரூபா நிதிப் பங்களிப்பில் புங்குடுதீவு 6ம் வட்டாரத்தில் இயங்குகின்ற ஐங்கரன் முன்பள்ளிக்கு பாண்ட் வாத்தியக் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் ஊர்காவற்துறை தொகுதியின் தமிழ் அரசுக் கட்சி முக்கியஸ்தர் குணாளன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.