சர்வதே குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கைக்கு அடங்காமை திரைப்படக்குழு வழங்கிய சன்மானம்.
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பின்தங்கி வரும் நிலை என்பதை முறியடித்த பெண்கள் வரிசையில் இன்று இந்துகாதேவியின் சாதனை மிகப்பெரியது. இம்மாதம் ( ஜனவரி 28ம் திகதி ) இலங்கை திரையரங்குகளில் வெளியாகும் தென்னிந்திய முழுநீளத்திரைப்படம் அடங்காமை. இத்திரைப்படத்தின் ( வோர்ஸ் பிக்சர்ஸ் ) தயாரிப்பாளர்கள் பொன்புலேந்திரன், மைக்கேல் ஜான்சன் கதாநாயகன் சரோன் ஆகியோர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.
28ம் திகதி திரைப்படம் வெளியாகும் நிலையில் இந்த சாதனைப்பெண்ணுக்கு திரைக்குழுமம் சார்பாக ( வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் ) ரூபா ஒரு லட்சம் (100,000 ) கொடுத்து கெளரவப்படுத்தியிருக்கின்றனர்.
அதுமட்டுமன்றி அவரது உயர்கல்வி நடவடிக்கைகளுக்கான தொடர் முயற்சிகளுக்கும் தங்கள் உதவிகளை தொடர்வதாகவும் தெரீவித்துள்ளனர். மேலும், தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் இந்துகாதேவி தனது திறமைமீது கொண்ட நம்பிக்கையை உரமாக்கி இன்று இச்சாதனையை படைத்து நாட்டுக்கும் முல்லைத்தீவு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், 25வயதுக்குட்பட்ட 50_55 கிலோகிராம் எடைப்பிரிவுப் போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ள எங்கள் வீரமங்கை கணேஷ் இந்துகாதேவிக்கு அடங்காமை திரைப்படகுழு சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.