கலை.இலக்கியத்துறையில் இளம்ஆர்வலர்களின் வளர்ச்சி மேம்பாட்டுக்காக கடந்த 41 ஆண்டுகளாக தலைநகரில் இயங்கிவரும் புதிய அலை கலை வட்டம் பல்வேறு களங்களை ஏற்படுத்தி இலைமறைகாயாக இருக்கும் இளங் கலைஞர்களை இனங் கண்டு வெளிக்கொணர்ந்து வருகின்றது.
இந்த வகையில் 1995ஆண்டு முதல் கலை, கலாசாரப் போட்டிகளை எவோட்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியாக நடத்தி வருகின் றது.
இந்த வரிசையில் எவோட்ஸ்-2021க்கான விருது வழங்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 30.01.2022 அன்று மாலை 4 மணிக்கு கொழும்பு-11 கதிரேசன் வீதியிலுள்ள ஸ்ரீ கதிரேசன் மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வட்டத்தின் நிறுவனரும் கலைஞரும் பத்திரிகை ஆசிரியருமான ராதாமேத்தாவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்சியில் பிரதமஅதிதியாக புரவலர் புத்தகப் பூங்காவின் நிறுவனரும் டவர் அரங்க மண்டப நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான புரவலர் ஹாசிம் உமர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அஸிஸ் மன்றத்தலைவர் அஷ்ரப் அஸிஸ்,வீரகேசரி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.ரி.குருசாமி, தொழில்அதிபர் கலாநிதி பிரபாகரன், தொழில் அதிபர் கனக.ரகுநாதன், வத்தளை நகரசபை உறுப்பினர்.
ஆர்.விஜயகுமார். தினகரன் ஆசிரியர் தெ.செந்தில்வேலவர், வீரகேசரி ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன், காயத்திரி பீட நிர்வாகி ஸ்ரீரங்கதாஸ் விஜயானந்த், கவிஞர் பிரேம்ராஜ், டவர் அரங்க மண்டப தமிழ்துறை பொறுப்பாளர் கலாநிதி ஜெயபிரகாஷசர்மா, தொழில் அதிபர் ரவீந்திரன், சமூகசேவகி கௌசலாதேவி மற்றும் ஏ.ஆர்.ஜெ.வி.ஆஷா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்
இந்நிகழ்வில் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கலை, கலாசாரப்போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கும் கடந்தகாலங்களில் வட்டத்தினுடன் இணைந்து செயற்பட்டவர்களும் இளம் ஆர்வலர்களுக்கும் விருதும், ‘கலாமித்திரா’ பட்டமும் வழங்கப்படவுள்ளதுடன் கலை நிகழ்சிகளும் நடைபெறவுள்ளன.