ஜனவரி 28முதல் இலங்கை திரையரங்குகளில் அடங்காமை .
தென்னிந்திய முழுநீளத்திரைப்படம் அடங்காமை. இயக்குனர் கோபால் அவர்களின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் அண்மையில் தமிழ்நாட்டில் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.
இலங்கை தமிழர்களான மைக்கேல் ஜான்சன் மற்றும் பொன்புலேந்திரன் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருக்கின்றனர்.
திரைப்படத்தில் கதாநாயகனாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த சரோன் நடித்திருக்கின்றார்.
மூன்று நண்பர்களுக்கு இடையில் நடக்கும் சுவாரஷ்யமான விடயங்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் இத்திரைப்படத்தை கட்டாயம் அனைவரும் திரையரங்குகளில் கண்டு மகிழுங்கள்.
இலங்கையில் யாழ்பபாணம், வவுனியா, மட்டக்களப்பு, கொழும்பு, திருகோணமலை, நுவரேலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் விமரிசையாக வெளியிடப்படுகின்றது.
மக்கள் அனைவரையும் அன்புடன் திரையரங்கற்கு அழைக்கிறார்கள்
அடங்காமை திரைக்குழு.