சூரியன் வானொலி பெயரை கேட்டவுடன் அதிர்ந்த காலம் போய் சூரியனா அதுவா என்ற காலம் வந்து விட்டதாக பலர் கூறுகிறார்கள்.
2021 வருடத்தில் சூரியன் வானொலியின் முக்கியமான அறிவிப்பாளர்கள் விலகிய வருடமாக இருந்தது.
குறிப்பாக ரமேஷ் , சந்த்ரு , மேனகா இவர்களை தொடர்ந்து வருட இறுதியில் லோஷனும் விலகினார்.
இப்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நேயர்கள் இருக்கிறார்கள்.
சில நேயர்கள் சொல்கிறார்கள் நாம் சூரியன் என்ற பெயருக்கு தான் கேட்டோம்.அறிவிப்பாளர்களுக்காக இல்லை என்று.
சிலர் சொல்கிறார்கள் நாங்க அறிவிப்பளர்களுக்காக சூரியன் கேட்டோம் என்று ஆனால் எதை நம்புவது என்று தெரியாமல் உள்ளது.
அதிர்ச்சி ரிப்போர்ட் என்னவென்றால் அவரவர் தங்கள் தனிப்பட்ட காரணங்களுக்கு விலகி கொண்டார்கள்.
இல்லை இதற்கு பின்னால் ஒரு தீய சக்தியின் வேலை என்று நீங்கள் நினைத்தால் அப்படியும் இருக்கலாம்.
எது எப்படியோ சூரியனை முதற்தர வானொலியாக வலம் வர வைக்கவேண்டியது ரசிகர்களாகிய உங்கள் கடமை.