கிராண்ட்பாஸ் ரன்திய உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் 17 வயது இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக் டொக் வீடியோ தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமபக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உயிரிழந்த இளைஞன் மேலும் இரண்டு நண்பர்களுடன் ரன்திய உயன அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி பயணித்த போது பின்னால் வந்த அடையாளம் தெரிந்த நபர்கள் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து அப்துல் லத்தீபின் வயிற்று பகுதியில் அவர் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.