கருடா தயாரிப்பின் திரைப்பட கலைஞர் போட்டி தொடர்பாக தற்போது கலைஞர்கள் மத்தியில் சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக இயக்குனர் மதி சுதா தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
எங்கள் சினிமா முயற்சிகள் வெல்ல வேண்டும் என்ற நல் எண்ணத்துடன் முதலிட்டு வித்திட வந்திருக்கும் இம் முகம் தெரியாத புண்ணியவானுக்கு பெரும் நன்றிகள்.
என் வார்த்தைகள் ஒரு பெரும் முயற்சிகளை சிதைக்கக் கூடாது என்பதில் எப்போதும் கவனத்துடன் இருப்பவன் நான்
ஆனால் ஒரு பொது முயற்சியில் பொதுப் பெயரைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்க வேண்டும்.மலையகத்தைச் சேர்ந்த சிலரும்* கொழும்பைச் சேர்ந்த சிலரும்* வடக்கு கிழக்கில் உருவாகும் திரைப்படங்களைப் பிரித்துப் பார்க்கின்றார்கள் என்பது ஒரு சிலரின் நடத்தை மட்டுமே.
அதே போல தான் இங்கும் சிலரும் இருக்கின்றார்கள் என்பதையும் நான் மறுதலிக்கவில்லை.
இவற்றை வைத்துக் கொண்டு பிரதேச பிரிவினைகளை கலைஞர்களுக்குள் தோற்றுவிப்பதை நான் மாற்றுக்கருத்திடுகின்றேன்.
இந்த வடிவமைப்புப் பற்றி இம்முயற்சிக்கு வித்திட்டவருக்கு தெரியும் தெரியாது என்பது எனக்குத் தெரியாது ஆனால் இந்த அணுகுமுறை தவறு என்பது மட்டும் எனக்குத் தெரியும்.
”கருடா வின் சினிமா” என்று வந்திருந்தால் இதில் எந்தவித கருத்தையும் நான் முன் வைக்கமாட்டேன் ஆனால் ”எங்கள் சினிமா” என்பது தமிழ் பேசும் அனைவருக்குமுரியதாகும்.
இதில் எனக்கு உடன்பாடில்லாதவை1) இது என்ன போட்டி எப்படி இடம்பெறும் என்ற தெளிவு சுவர்ப்படத்தில் இல்லை2) குறிப்பிட்ட நான்கு பிரதேசங்களை மட்டும் குறிப்பிட்டு ”எங்கள் சினிமா” என பொதுமைப்படுத்தியமையாகும். ஏனைய மாவட்டங்களுக்கு பின்னர் இடம்பெறும் எனக் குறிப்பிட்டிருந்தால் நானும் இதை ஏற்கின்றேன்.
குறிப்பு – மேலே நான் குறிப்பிட்ட வார்த்தைகள் இச் செயற்பாட்டை விமர்சிப்பதாக இல்லை அது மாற்றங்களுடன் விருட்சமாக வேண்டும் என்ற அவா எனக்குண்டு. ஆனால் இப்படி ஒரு பெரும் முயற்சியானது ஏற்பாட்டாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களால் கலைஞர்களுக்குள் தேவையற்ற பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.