சில பாடல்கள் மக்கள் மத்தியில் எழுத்தில் பிரபலம் அடைந்து விடுகிறது.
மட்டக்களப்பு பேட்டை பாடல் தொடர்பாக கிளசன் குலசிங்கம் தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்
மட்டக்களப்பின் பல ஊர்களது பெயர் கூறும் இப்பாடலை எனது நட்பு வட்டத்தில் உள்ள என் மரியாதைக்குரிய ஒருவரே கோவேறு கழுதை என விமர்சனம் செய்திருந்தார்.
இந்த காணொளி பாடலில் குறைகள் உண்டு என்பதை ஏற்கலாம் ஆனால் இது படைப்பே இல்லை என்பதை ஏற்க முடியாதல்லவா? அதனை ரசிகர்கள் நிரூபிக்கிறார்கள்.
இரு நாட்களில் 17000 (17K+) பார்வையாளர்களை கடந்தது எம்மை பொறுத்தவரை பெரிய விடயமே. ஆதரவு தரும் உறவுகளுக்கு அன்பான நன்றி
மூக்குக்கும் வாய்க்கும் தொடர்பில்லாத கோவேறு கழுதைதானா இந்த பாடல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்?
பாடல் குழுவிற்கு எமது வாழ்த்துக்கள்.