சூரியன் வானொலி பணிப்பாளரும் , சிரேஷ்ட ஒளிபரப்பாளருமான லோஷன் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
உங்கள் அனைவராலும் வழங்கப்பட்டுவரும் பேரன்புக்கு நன்றி !வாழ்த்துகள், விசாரிப்புக்கள், கேள்விகள் அனைத்துமே அன்பினால் விழைந்தவை என அறிவேன்.எனது வாழ்க்கையில் சில விடயங்களை நான் எப்போதும் முழுமையாக நம்புபவன்.
மனிதர் மீதும் என் மனசாட்சி மீதும்முழுமையான நம்பிக்கை.ஒரு விடயத்தை முயலும்போது அல்லது தொடங்கும்போது 100%ஐ வழங்குவது.முழுமையான ஈடுபாட்டோடும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையோடும் அந்தச் செயலில் இறங்குவது.
எதைக்கொடுத்தாலும் பூரண அன்போடும் விருப்போடும் வழங்குவதும், வழங்கப்படுவது எதுவாயிருப்பினும் அது பன்மடங்காய்த் திரும்பிக் கிடைக்கும் என்பது.உழைப்பு, அன்பு, செய்யும் நற்காரியங்கள், உதவிகள் இப்படி பல..செய்யும் தொழிலின் மீதான பக்தியும் தொழில் தரும் இடத்தின் மீதான விசுவாசமும் 100%. அதுவே எம்மை உயர்த்தும்.
சோறு போடும் இடம் – என்னைப் பொறுத்தவரை என் கலையகம் – கருவறைக்கு நிகரானது.எல்லாவற்றையும் விட குடும்பம், உறவுகள், அந்தந்தத் தருணங்களை முழுமையாக வாழ்ந்துவிடுவது என்பது.வாழ்க்கை வாழ்வதற்கே…கடந்த வருடத்தின் இறுதிநாளன்று (டிசம்பர் 31) சூரிய ராகங்களில் இருந்து விடைபெற்றுக்கொண்டேன்.
சூரியன் வானொலியில் இனி நிகழ்ச்சிகள் வாயிலாக எனது குரல் ஒலிக்காது.எனினும் இந்த மாதம் 31ஆம் திகதி வரை சூரியன் நிகழ்ச்சிப் பணிப்பாளராகத் தொடரவுள்ளேன்.
சிறகுகளை விரிப்பதற்காகவும் என் நேரத்தை இனி எனதாக்குவதற்காகவும் பதவி விலகிச் செல்லும் என் முடிவை ஏற்றுக்கொண்ட, இத்தனை வருடங்கள் எனக்கு ஆதரவு நல்கிய நிறுவனத் தலைவருக்கு மனமார்ந்த நன்றி.
அன்பு காட்டி, துணை நின்ற, இன்னும் அன்போடு தொடர்கின்ற சூரிய சொந்தங்கள், ஒலிபரப்பில் துணைவந்த அலுவலக சக பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி.நாளை முதல் ஒலிபரப்பிலும், பெப்ரவரி முதல் நிர்வாகத்திலும் தொடரப்போகும் அன்பு சூரியன் தம்பி, தங்கையர்க்கு வாழ்த்துகள்.சிறகுகள் விரிப்பேன்…
அவரது முயற்சிகள் வெறி பெற எமது வாழ்த்துக்கள்.