சிங்கள சினிமா என்பது எத்தனையோ வருட காலமாக புதிய முயற்சிகளை செய்து வருகிறது.
இவர்களின் புதிய முயற்சி தான் இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்காவின் புதிய படம் தான் Underpants Thief
அல்லது சிங்களத்தில் ஜங்கி ஹோரா , தமிழில் உள்ளாடை களவாணி.
தயாரிப்பாளர் ரேணுகா பலசூரியாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் புபுது சதுரங்க மற்றும் டில்ஹானி ஏக்கநாயாக்க ஆகியோர் பிரதான வேடத்தில் நடிக்க படம் இப்போது திரையரங்குகளில் ஓடுகிறது.
சிங்கள சினிமா பிரபலங்களான ரவீந்திர ரந்தெனிய மற்றும் ஜாக்ஸ்ன் அந்தனி ஆகியோர் இந்த பாடத்தை பாராட்டியுள்ளனர்.
ஒரு கட்டுப்பாடு சினிமாவில் இருந்து வெளியே வந்ததாக இயக்குனர் சோமரத்ன திசாநாயக்க கூறுகிறார்.