தயாரிப்பாளர்களே கால் பதிக்க தயங்கும் ஈழத்துக்குள் எங்கள் கதைகளை நாங்களே சொல்ல வேண்டும்

“வெந்து தணிந்தது காடு” தமிழகத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமும் இதே தலைப்பு தான்.

ஆனால் இன்று பல சர்வதேச விருதுகள் பெற்று தன் திரைப்படத்தின் முதற்பார்வையை வெளியிட்டிருக்கின்றனர் ஈழத்தின் வெந்து தணிந்தது காடு திரை குழுவினர். தயாரிப்பாளர்களே கால் பதிக்க தயங்கும் ஈழத்துக்குள் எங்கள் கதைகளை நாங்களே சொல்ல வேண்டும் என்ற முன்னெடுப்புடன் 160 பேரிடம் 3 வருடமாக சிறுக சிறுக சேர்த்த பணத்தின் மூலம் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

எங்களுக்கான சினிமா அல்லது எங்களுக்கான திரைமொழி என்று ஈழ சினிமாவின் உருவாக்கத்திற்காக போராடும் கலைஞர்கள் இவர்கள்.

பல குறும்படங்களின் சர்வதேச வெற்றியாளர், மதிசுதா அவர்களின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. ஒளிப்பதிவு பிரதீபன் செல்வம், படத்தொகுப்பு மணிகண்டன், இசை பத்மயன், கலை நியூட்டன், தயாரிப்பு நிர்வாகம், மக்கள் தொடர்பு – ஜெனோசன் ராஜேஸ்வர் என பல கரைஞர்கள் இத்திரைப்படைப்பில் பணியாற்றியிருக்கின்றார்கள்.

இதில் படத்தொகுப்பைச் செய்த மணிகண்டன் (சென்னை) , ஒளிப்பதிவு செய்த பிரதீபன் செல்வம் (ஈழம்) , ஒலிச் சேர்க்கை செய்த K.V சுப்ரமணியம் (கேரளா) ஆகியோர் இந்தியாவின் பூனே திரைப்படக்கல்லூரியில் சிறப்பு பட்டம் பெற்றவர்களாவர்.

எங்கள் கதைகளுக்கான திரைப்படத்திற்கு எமது மக்களின் ஆதரவு மிக முக்கியம் எனவே இப்படைப்பை மற்றவருக்கும் கொண்டு சேர்க்க உதவும்படி அன்போடு வேண்டி நிற்கின்றார் இயக்குனர் மதிசுதா. இத்திரைப்படத்தில் பாத்திரமேற்று நடித்த ஈழத்தின் பல கலைஞர்கள் படப்பிடிப்பு நாள் முழுவதும் அதே தளத்தில் குடும்பமாக வாழ்ந்து நடித்திருந்தார்கள். எனவே எமது களத்தில் உருவாகும் திரைப்படத்திற்கு ஆதரவு வழங்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!