வீடியோ பாடல்களின் வருகையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது.
கொவிட் காலப்பகுதியிலும் கனிசமான பாடல்கள் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் பாடல்கள் வர ஆரம்பித்துள்ளது.
Kisha Film Makers & Entertainment Media அணியின் 15 வது படைப்பு தான் பொண்ண தொட்டா கெட்ட.
சஜயின் இசையில் சிது விஜயின் இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த பாடலுக்கு யசோ மற்றும் ஜொஹாஸ் பிரான்சிஸ் திரையில் கலக்க உள்ளனர்.
பாடலின் மோஷன் போஸ்டர் இன்றைய தினம் வெளியாகியது.காதலித்தால் காளி தான் போன்று பாடல் இருக்கும் என்று தான் போஸ்டரை பார்த்தல் தோன்றுகிறது.
தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் பாட இருப்பதாக பாடல் குழு அறிவித்துள்ளது.
பாடல் வெற்றி பெற நமது நாட்டின் கலைஞர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்