பூவரசி மீடியா சார்பில் ஈழவாணி, கமலசீலன் இணைந்து தயாரித்திருக்கும் பிரமாண்டமான பாடல் “நந்திக் குவேனி”. 3ஏ ஸ்ரூடியோ மற்றும் வி.திலீபனும் இவர்களுடன் கைகோர்த்திருக்கின்றார்கள்.
“நந்திக் குவேனி” பாடலின் டீசர் நேற்று வெளியாகியது.பல விடயங்களை எடுத்து கூறும் இந்த படைப்பு நிச்சயமாக பேசப்படும்
ஜெயந்தன் விக்கியின் இசையில் உருவான இப்பாடலுக்கான ஒளிப்பதிவு ரெஜி செல்வராசா, படத்தொகுப்பு அலெக்ஸ் கோபி, ஒப்பனை அன்ட்ரூ ஜூலியஸ். நடன இயக்கம் வாகீசன்.
நவயுகா, மிதுனா, விதுஷான், சுகிர்தன், ஷாஷா ஷெரீன், கீர்த்தி, திருமலை பிரணா, வினித், நஜோமி, ஷஜந்தி, அருண் ராஜ், ஜசோதரன் ஆகியோர் நடித்திருக்கும் இப்பாடலின் இணை இயக்கம் கார்த்திக் சிவா. இயக்கம் ஈழவாணி.
நந்திக் குவேனி பாடலின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இப்படைப்பு குறித்து அதன் இயக்குனர் ஈழவாணி தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.