கோடீஸ்வரன் ஈழத்து சினிமாவில் மிக முக்கியமான ஒரு கலைஞர்.
இதுவரை தனது இயக்கத்தில் பல படைப்புக்களை தந்துள்ளார்.
இவரது அடுத்த படைப்பு தான் கலிகாலன்.பெயரே சற்று வித்தியாசமாக தான் இருக்கிறது.நிச்சயமாக கதையும் வித்தியாசமாக தான் இருக்கும்.
இம்மாதம் 28ஆம் திகதி செங்கலடி செல்லம் , மாங்காடு கீபேஷ் , கல்முனை GK ,அர்ச்சனா அக்கரைப்பற்று ஆகிய திரையரங்குகளில் காலை 9:௦௦ | நன்பகல் 1:௦௦ | மாலை.5:௦௦ நேரங்களில் கலிகாலன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
எது எப்படியோ நல்ல முயற்சி.இந்த முயற்சிக்கு பெரிய வாழ்த்துக்களை கோடீஸ்வரன் தலைமையிலான கலிகாலன் படக்குழுவுக்கு தெரிவிக்க வேண்டும்.
எம் சினிமாவை வளர்க்கும் நோக்குடன் உங்களை நாடி நாம் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் . எனவே அவர்களை ஊக்குவிக்க வேண்டியது உங்கள் கடமை.