ஹாலி ஏல ரில்போல வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்றவர் தான் மதுஷிகா டில்ருக்ஷி.
மதுஷிகா டில்ருக்ஷி பிறப்பிலேயே கால்களை இழந்தவர்.
சிறுவயதில் அவருடைய தாயாருடன் பாடலசலைக்கு சென்றவர் பிறகு மாணவ மாணவிகளின் உதவியுடன் அவராக பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.
நடந்து முடிந்த உயர்தர பரீட்சையில் மூன்று A சித்திகளை பெற்று பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளார்.
நம்மில் பலர் சிறிய பிரச்சனைகளுக்கு துவண்டு விடுகிறார்கள்.ஆனால் வாழ்க்கையில் எத்தனை தடைகளை இந்த மதுஷிகா சந்தித்திருப்பாள்.
இருப்பினும் தொடர் முயற்சியின் மூலம் இன்று பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.
மதுஷிகாவுக்கு எமது வாழ்த்துக்கள்