பதிவுக்கு சொந்தக்காரர் வசந்தம் வானொலியின் அறிவிப்பாளர் புவனேஷ்
இப்படியான சில நல்ல மனிதர்கள் இருப்பதனால் தான் நாட்டில் மழை பெய்கிறது. நாமும் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை உரிய நேரத்தில் செய்வோம்.
புவனேஷின் முகப்புத்தக பதிவில் இருந்து பெறப்பட்டது
நேற்று இரவு 10 மணியளவில் சம்பவம்.. நான் வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது அதுருகிரிய பாதையில் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் சூழ்ந்துநின்றதை கண்டு. நானும் அருகில் சென்றேன்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒரு லொறியில் மோதி இரத்தம் ஓட விழுந்து கிடப்பதையும் பின்னால் வந்த சுமார் 18 வயதுடைய மகன் கதறி அழுவதயும் கண்டேன்.
அங்கு உள்ளவர்கள் சொன்னார்கள் உயிர் போய்விட்டது என்று எனக்கு ஒரு சந்தேகம் .அருகில் சென்று நாடித்துடிப்பை பார்த்து துடிப்பு இருப்பதை அறிந்து நான் உடனே மற்றவர்களை விலக சொல்லி மார்பு பகுதியை அழுத்தி அழுத்தி பக்கத்தில் இருந்தவரை விழுந்து கிடப்பவரின் வாயில் காற்றை அனுப்ப சொல்லி விடாமல் முயற்சித்தேன் ஒரு 10 நிமிடம் என்னுடைய முயற்சி தொடர ஒரு சிறிய இருமலோடு அசைய ஆரம்பித்தார். உடனே எனக்கு தெரிந்த வைத்திய நண்பர் ஒருவரை தொடர்புகொள்ள முயற்சித்தேன் அவர் அழைப்பில் இல்லை. அவரக்கு என்னால் முடிந்த வார்த்தைகளை சொல்லி சொல்லி சமாதான படுத்த ஆம்புலன்ஸ் வந்தடைந்தது இடத்திற்கு .
உடனே அவர்கள் அவர்களுடைய சேவையை ஆரம்பித்தனர் .அந்த மகன் உட்பட அங்கு இருந்தவர்கள் என்னிடம் கைகூப்பி கும்பிட்டு ” ஒயாட கோடாக் பிங் மஹத்யா ” என்று சொல்ல கண்கள் கலங்கியது.நான் சொல்வது அங்கு முதல் உதவி பற்றி பலருக்கு தெரிந்து இருந்தாலும் கூட முன்வர யோசித்து இருப்பார்கள். அல்லது தெரியாமல் இருந்திருக்கும் .என்னுடைய யோசனை வாகன அனுமதி பத்திரம் பெரும் போது இதுபோன்ற விடயங்களில் கூடுதலான கவனம், பரிட்சை கேள்விகளில் இவ்வகையான கேள்விகள் அதிகமாக சேர்த்தால் காப்பாற்ற முடிந்த உயிர்களை மீட்கலாம் .காரணம் அதிகமான ஆபத்தான நேரங்களில் எம்மிடம் குறைந்தது ஒரு சாரதி இருப்பார்.
நமது கலைஞர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்