கடந்த பல மாதங்களாக சக்தி வானொலியில் ஒலிபரப்பான ராவணன் ஆகிய நான் தொடர் ஏதோ அவசரத்தில் முடிந்தது போல் நாம் உணர்கின்றோம் .
நேயர்கள் பலரால் எதிர்பார்க்கப்பட்ட முடிவு இது அல்ல .ஆனால் இன்னமும் தொடரை நீடிக்க முடியாத சூழல் .ஆகவே தான் தொடரை அவசரத்தில் முடிக்க வேண்டி வந்ததை உணர முடிகிறது .
இருப்பினும் வானொலி அறிவிப்பாளர்கள் நடிகர்களாக அவதாரம் எடுத்த இந்த ராவணன் ஆகிய நான் தொடர் இயக்குனர் அலை வரிசை பிரதானி அபர்னா சுதன் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.இதில் குறிப்பாக மூத்த கலைஞரான சந்திரசேகரன் அவர்கள் வயதான ராவணன் கதாபாத்திரத்தில் நடித்தமை அனைவராலும் பேசப்பட்டது.
ராவணன் ஆகிய நான் குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.