சன் டிவியில் கடந்த 90களில் பிரபலமான ஆனந்த கண்ணன் கடந்த வாரம் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி சின்னத்திரை மற்றும் பெரிய திரை உலகினர்களை உலுக்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை அவரது மனைவி கண்ணீருடன் நிறைவேற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் தான் பிழைக்க மாட்டோம் என்று தெரிந்தவுடன் தனது மனைவியிடம் தனது கடைசி ஆசையை கூறியுள்ளார். என்னுடைய சாவு ஒரு துக்க நிகழ்ச்சி போல் இருக்கக் கூடாது என்றும் ஒரு கல்யாண வீடு மாதிரி இருக்க வேண்டும் என்றும் என்னுடைய பிணத்தை பார்க்க வரும் அனைவரையும் சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும் என்றும் அதேபோல் கொட்டு மேளத்துடன் என்னை தூக்கிச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.
இதனை அடுத்து ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை அவருடைய மனைவி கண்ணீருடன் நிறைவேற்றி உள்ளதாக ஆனந்த கண்ணனின் நெருங்கிய தோழியான நிஷா என்பவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனந்தகண்ணன் விரைவில் தமிழகம் வந்து ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்ததாகவும் அதே போன்று திரைப்படத்திலும் நடிக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதற்குள் புற்றுநோய் வரை இந்த உலகத்தில் இருந்து அழைத்துச் சென்றுவிட்டது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சோகத்துடன் கூறியுள்ளனர்.