OC WIFI சமூக இணைய பொழுதுபோக்கு பக்கம் பலரும் அறிந்த ஒன்றே.
இதன் பிரதான படைப்பாளியான யசோ நல்ல திறமையான படைப்பாளி.
அவருக்கு கடல் தாண்டியும் ரசிகர்கள் உள்ளார்கள்.
தற்போது யசோவுக்கு புதிய பிரச்சனை ஒன்று உருவாகியுள்ளது.அவரது காணொளிகளில் மலையக மக்களை கொச்சை படுத்தும் வார்த்தைகளை பாவிப்பதாக ஊடகவியலாளர் லங்கேஷ் குற்றம் சுமத்துகிறார்.
இது தொடர்பாக அவர் இன்று ஒரு முகப்புத்தக பதிவை இட்டுள்ளார்.
தம்பி உன் திறமைக்கு வாழ்த்துக்கள்.இருந்தும் சில நேரங்களில் நீ மலையகத்தை கொச்சைப்படுத்தி செய்யும் காணொளிகள் கொஞ்சம் மனவருத்தத்தை தருகின்றது நீ அதிக திறமையானவன் உன்னை போன்று நகைச்சுவை மிக்க அறிவிப்பாளனை நான் பார்த்தது இல்லை இருந்தும் சில விடயங்களை தவிர்த்துக்கொண்டாள் சிறப்பு நீ பார்க்கும் மலையகம் வேறு நாங்கள் இங்கிருந்து பார்க்கும் மலையகம் வேறு.
இந்த பதிவுக்கு ஏராளமான முகப்புத்தக பாவனையாளர்கள் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர்.
இந்த பதிவுக்கு இன்னமும் OC WIFI சமூக இணைய பொழுதுபோக்கு பக்கத்தின் படைப்பாளி யசோவிடமிருந்து பதில் இல்லை.
நாமும் பார்த்துக்கொண்டிருப்போம் அடுத்த காணொளி எப்படி வருகிறது என்று.