இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிப்பு | 510 கிலோகிராம் நிறையுடைய மாணிக்கக்கல்

200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது 510 கிலோகிராம் நிறையுடையது என மாணிக்கக் கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க குறிப்பிட்டார்.

உலகிலே மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இதுவென அவர் கூறியுள்ளார்.

இரத்தினபுரி – கஹவத்த பகுதியிலுள்ள தனியார் ஒருவரின் காணியிலிருந்து இந்த நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சியை பெற்றுக்கொள்வதற்கான பிணை முறியை சர்வதேச கொள்வனவாளர் ஒருவர் சமர்ப்பித்துள்ளதாகவும் மாணிக்கக் கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட இந்த நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சியை, பாதுகாப்பு மற்றும் கொரோனா தொற்று நிலைமையால் இரகசியமாக பேணி பாதுகாத்ததாகவும் தற்போது அதனை முழுமையாக சுத்தப்படுத்தி, தரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், நிறையும் அளவிடப்பட்டுள்ளதாகவும் திலக் வீரசிங்க குறிப்பிட்டார்.

இது 25,50,000 கரட் பெறுமதியானது எனவும் மிகவும் அரிதான வகையை சேர்ந்த இந்த நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி, சர்வதேச சந்தையில் பாரிய விலைமதிப்பை கொண்டதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!