தாயுமானவ சுவாமி | நீங்கள் ஒரு கிங்மேக்கர் – உமாச்சந்திரா பிரகாஷ்

மறைந்த கேபிடல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் அமரர் ராஜாமகேந்திரன் அவர்கள் ஒரு கிங் மேக்கர் என்பதை தனது முகப்புத்தக பதிவு ஒன்றின் மூலம் ஊடகவியலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்

இனக்கலவரத்தால் 1977 ஆம் ஆண்டு வெறும் 41 நாள் குழந்தையாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று, மீண்டும் 1996 ஆம் ஆண்டு யுத்தத்தால் அகதியாகி யாழ்ப்பாணத்தில் இருந்து தலைநகருக்கு இடம்பெயர்ந்த கசப்பான வாழ்க்கையே என் வாழ்க்கை.

உங்களுக்கும் எனக்கும் 2001 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரையான இருபது வருட பந்தம். முகவரி இல்லாத ‘உமா’வுக்கு முகவரி கொடுத்தவர் நீங்கள். “அவள் கெட்டிக்காரி” என்பதை பலரிடம் பல தடவைகள் அழுத்திச் சொன்னவர். உங்கள் ஆலோசனைகள், உதவிகள், வாய்ப்புக்கள், அங்கீகாரங்களை எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லை.

எதிர்காலத்தை கணிப்பதில் கில்லாடி. 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனு கையெழுத்துட்ட பின்னர், உங்களைச் சந்தித்தபோது நீங்கள் எனக்குச் சொன்னது இன்றும் பசுமையாக நினைவு இருக்கிறது. “எதிர்வரும் 2020 ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் அணியில் நீர் போட்டியிடுவீர்” என்பதே அது. நீங்கள் ஒரு கிங்மேக்கர்.

பலரை பலதுறைகளில் உருவாக்கியுள்ளீர்கள் ; அவர்களில் அரசியலில் ஒரு சிலர். எப்பொழுதும் மற்றவர்களைப் பற்றி சிந்திக்காமல், அவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாமல், என் பாதையை தீர்மானிப்பது எனக்குப் பிடிக்கும். ஆனால் இன்று நான் பொறாமைப்படும் ஒருவர் என்றால் அவர் ரங்கா அண்ணன்தான்.

2013 ஆம் ஆண்டு புற்றுநோய் காலனிடம் இருந்து எனது தந்தையை பத்திரமாக மீட்டுத் தந்த தாயுமானவர் நீங்கள். ஆனாலும் தந்தை ஸ்தானத்தில் இருந்து தாரை வார்த்துக் கொடுக்கும் பாக்கியம் பெற்றவர் Jeyaratnam Sriranga அண்ணா மாத்திரமே. ‘தாரை வார்த்தல்’ என்பதற்கான விளக்கத்தை இத்துடன் இணைந்துள்ளேன்.

பழங்காலத்தில் ஒரு பொருளை மற்றவருக்குக் கொடுக்கும் போது, மீண்டும் மனம் மாறி பிற்காலத்தில் அந்தப் பொருள் என்னுடையது என்று உரிமை கோரக் கூடாது என்பதற்காக தாரை வார்த்துக் கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு ஆவணத்தில் எழுதிக் கொடுப்பதற்கு சமமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் ஆவணங்கள் புழக்கத்தில் இல்லாததாலும், அவ்ஆவணங்களை பதிவு செய்வதற்கு ஏற்ற வசதிகள் காணப்படாததாலும் தாரை வார்த்துக் கொடுத்தல் சிறந்த முறையாகக் கருதப்பட்டது. மீனாட்சி திருமணத்தில் மீனாட்சியம்மையை சோம சுந்தரரின் கரங்களில் திருமால் தாரை வார்ப்பது போன்ற காட்சியை கோவில் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் நாம் காணுகிறோம்.

இது போன்ற காட்சியை திருமண அழைப்பிதழில் முன்னட்டையில் அச்சிடுவதையும் அவதானிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!