பத்மயனின் “வெருளி” நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது

நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட “வெருளி” பாடலுக்கு ஈழத்தின் முன்னணி இசையமைப்பாளரான பத்மயன் இசையமைத்துள்ளார்.

தமிழ் – சிங்கள மொழிகளில் உருவாகியுள்ள இப்பாடலை மதுவி வைத்தியலிங்கம், காயத்ரி அஷினி ராஜபக்ஷ, சங்கீர்தன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகள் கே.எஸ்.சாந்தகுமார் (தமிழ்), கீத்மா மதநாயகே (சிங்களம்)

இந்தப் பாடலின் காணொளி உருவாக்கத்தின் பின்னால் மிகப்பெரும் குழு இருப்பதை அவதானிக்க முடிகின்றது. கிஷாந்த் ஸ்ரீ இயக்கியுள்ள இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவு பிரதீபன் செல்வம், படத்தொகுப்பு எஸ்.பி.நிஷோ, தயாரிப்பு முகாமை மதிசுதா.

கத்தரித்தோட்டத்தின் மத்தியிலே நின்று காவல் காக்கும் சேவகன் “வெருளி” யை மையப்படுத்தி பாடல் உருவாக்கம் அமைந்திருக்கின்றது. இலங்கை போன்ற பல்லினம் வாழும் நாட்டில் கலையின் மூலமாக நல்லிணத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. பாடல் குழுவினருக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்

Music | Siva Pathmayan
Lyrics | K.S Shanthakumar | Geethmaa Madanayake
Mix and Mastering | Vakeesan Ananth
Cinematography | Pratheepan Selvam
Production Manager | Mathi Sutha
Production Designer | Sazi Balasingam
Makeup | N.Senthurchselvan
Editing | Nisho SP
Director | Kishanth Sri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!