புத்தளம் – ஆணமடு பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்தும் போது, அதிக வலி ஏற்பட்டதை அடுத்து கோபமடைந்த பிக்கு ஒருவர், பரிசோதனைகளை நடத்துவதற்கான மாதிரிகளை பெற்றுக்கொண்ட தாதி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
அருகிலிருந்து பீங்கான் ஒன்றினால் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக, தாதியின் தலை பகுதியில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆணமடு ஆதார வைத்தியசாலையின் கொவிட் பரிசோதனை பிரிவில் கடமையாற்றிய தாதியொருவருக்கே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காய்ச்சல் மற்றும் தடிமன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆணமடு குமாரகம விஹாரையின் பிக்குவொருவருக்கு, பி.சி.ஆர் மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்கான பரிசோதனைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
பி.சி.ஆர் மாதிரிகள் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில், தனக்கு கடும் வலி ஏற்பட்டதாக தெரிவித்து, அருகிலிருந்த பீங்கான் ஒன்றினால் தாதியின் தலை பகுதிக்கு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான தாதி, மயக்கமுற்று கீழே வீழ்ந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை, வைத்தியசாலை ஊழியர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்காக தாதியின் தலையில் கடும் காயங்கள் காணப்படுகின்றமையினால், ஆரம்ப சிகிச்சைகள் அளிக்கப்பட்ட மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆணமடு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பத்மினி அபேரத்ன தெரிவிக்கின்றார்