ஒரு படைப்பாளிக்கு சிறந்த அங்கிகாரம் அவர்களுக்கு கிடைக்க கூடிய விருதுகளே.
அந்த வகையில் இலங்கை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இலங்கை கலைஞர்களை கெளரவித்து வருகிறது.
அந்த வகையில் இலங்கையின் மிகபெரிய சமையல் மற்றும் உணவு பொருள் தயாரிப்பாளர்களான றைகம் நிறுவனம் வருடந்தோறும் நமது கலைஞர்களை கெளரவித்து வருகிறது .
சிங்கள நாடகம் ,மற்றும் சிங்கள தொலைகாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் விண்ணபித்து அவர்களுக்கு விருது வழங்கும் வைபவம் இம்மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது .
இவ் விருது விழாவில் பரிந்துரைக்கபட்டவர்களுக்கான சிறப்பு நிகழ்வு அன்மையில் நடந்தது .
இதில் நேத்ரா தொலைகாட்சியை சேர்ந்த மூவர் 2018 இன் சிறந்த TV தொகுப்பாளர் பிரிவில் பரிந்துரைக்கபட்டுள்ளனர்.
தொகுப்பாளர்களான ரஞ்சனி ராஜ்மோகன் ,UL யாகூப் மற்றும் பிரநீதா கோணேஸ்வரன் ஆகியோர் பரிந்துரைக்கபட்டுள்ளனர்.
எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள விழாவில் யார் வெற்றியாளர் என்பது தெரியவரும்.
பரிந்துரைக்கபட்ட தொகுப்பாளர்களான ரஞ்சனி ராஜ்மோகன் ,UL யாகூப் மற்றும் பிரநீதா கோணேஸ்வரன் ஆகியோருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.