எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்ற நிலையில், பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 150 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான முஷாரப் , இஷாக் ரஹுமான் , அலி சபரி ரஹீம் ஆகியோர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்
இதனடிப்படையில் 91 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியினர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்தனர்.
பிரேரணைக்கு எதிரான வாத,விவாதங்கள் இன்றும் நேற்றும் இடம்பெற்ற நிலையில், சற்று முன்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.