பூவன் மதீசன் இசையில் வெளிவந்துள்ள பாடல் தான் வடை .
வரிகளையும் பூவன் மதீசன் எழுத சுஜித் G பாடியுள்ளார்
KR கிருஷ்ணா மாஸ்டரிங் செய்ய அருமையாக வந்துள்ளது வடை.
ராஜ் சிவராஜ் பாடலை இயக்கியுள்ளார் .கூடவே நடன அமைப்பையும் செய்துள்ளார்
அபிலாஷ் , ஸயன், னிருந் , உமேஷ் ஆகியோர் வடையை சாப்பிட்டுள்ளார்கள்
சசிகரன் யோ படத்தொகுப்பை கச்சிதமாக செய்துள்ளார் .வடிவமைப்பை சான் சந்திரன் கவனிக்க வடையை கடிக்கணும் போல் உள்ளது
73 வருட இலங்கை அரசியலை ஒரு ஓட்டை வடைக்குள் சொன்ன PoovanMatheesan & RajSivaraj மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
வடைய கடிக்க பார்க்க சுப்பு தன்ர துண்டைக் கேக்க அப்புவுக்கும் சுப்புவுக்கும் சண்டை வந்தது சண்டையில அந்த வடை பிஞ்சு போனது சுப்பு வடையைப் பிரிச்செடுத்து தன்ர துண்டை தின்ன போக அப்பு தன்ர பிரெண்டை சேர்த்து சண்டை போடுறார் சுப்புவிண்ட துண்டை பிரெண்டை வச்சு புடுங்கிறார் ஒத்தை வடை இப்ப ரெண்டு துண்டு அந்த ஓட்டை வடை இப்ப ரெண்டு துண்டு அப்புவோட சேர்ந்து நிண்டு சுப்புவுக்கு அடிச்சதால அப்புவுண்ட நண்பன் கொஞ்சம் கூலி கேக்குறான் அப்புவிண்ட கையில் வடையை தவிர வேறை ஒண்டுமில்லை அப்புவிண்ட வடையை நண்பன் பிச்சு தின்னுறான் ஒத்தை வடை இப்ப மூண்டு துண்டு அந்த ஓட்டை வடை இப்ப மூண்டு துண்டு “
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்