அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூஇறைவனின் மிகப்பெரிய உதவியால் தடைபட்டிருந்த யூ டிவியின் டயலாக் ஊடான ஒளிபரப்பு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
புகழனைத்தும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்.இந்த மீளிணைப்புக்காக கவலைப்பட்டு பிரார்த்தனைகள் செய்த யூ டிவி யின் அபிமானிகள் ஆதரவாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக யூ டிவி யின் முகாமைத்துவம் எடுத்த அயராத முயற்சிகளுக்கும் முன்னேற்ற ஏற்பாடுகளும் நான் மிக மிக பிரார்த்தனைகளுடன் கூடிய எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உளத்தூய்மையுடன் ஆற்றப்படும் இப்பணிகள் ஒரு போதும் விழுந்து போவதுமில்லை அழிந்து போவதும் இல்லை.சகலரையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக!நான் உங்கள் அன்பின்ஹாபிஸ் மௌசூக் அப்துல் ரஹ்மான்தயாரிப்பாளர் – யூடிவி