ஒலிம்பிக் போகும் நம் உடன்பிறப்பு
அம்மா , அப்பாவை இழந்த பிள்ளைகள் வாழக்கையில் முன்னேற முடியாது என்று இனி யாரும் சொல்ல முடியாது.
அதட்கு நல்ல உதாரணம் ரேவதி.பாட்டி வளர்ப்பில் இமயம் தொட போகிறாள்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மதுரை இளம் வீராங்கனை தான் ரேவதி.
.
செல்வி ரேவதி 23, மதுரை சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்தவர்.
அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தொடர் ஓட்டப்பிரிவில் பங்கேற்க உள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் 3 தமிழக வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.
4 ஆம் வகுப்பு படிக்கும்போது தந்தையை இழந்தார், ஒரு வருடத்தில் தாயையும் இழந்த இவரை இவரது பாட்டி வளர்த்து, டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்க வைத்துள்ளார்.
தற்போது இவர், தென்னக இரயில்வேயில் பணி புரிகிறார்.
நேர்மையான Selection மட்டும் இருந்தால் இன்னும் பல வைரங்கள் வெளிச்சத்திற்கு வரும்.
ஒலிம்பிக்கில் சாதனை படைக்க இருக்கும்.. மூன்று தமிழக வீராங்கனைகளுக்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்