நடிகை நயன்தாராவின் தந்தை உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் தந்தையின் வற்புறுத்தல் காரணமாக காதலரை திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போதும் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் தந்தை குரியன் கோடியாட்டு. விமானப்படையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர், தனது மனைவி ஒமனாவுடன் கேரளாவில் கொச்சின் பகுதியில் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நயன்தாராவின் தந்தை குரியன் இன்று உ டல் நிலை மோசமடைந்ததால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அங்கு அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கவலையில் இருக்கும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருவதோடு, பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.இந்த செய்தி தெரிந்து உடனடியாக நயனின் காதலர் விக்னேஷ் சிவன் வந்துவிட்டதாக தெரிகிறது.மேலும் இவர்களது திருமணம் மேலும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.