பிரபல டிவியில் ஒளிபரப்பாக விருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது போக..அதற்கான தேர்வுகள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும், சேனல் ஆட்கள் தெரிவித்திருந்தனர்…
தொலைக்காட்சி நிகழ்ச்சியிலே-யே பிரம்மாண்டத்தின் உச்சமாக திகழ்வது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி. ஏற்கனவே 4 சீசன்கள் வெற்றிக்கரமாக முடிந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசனை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவில் காரணமாக இந்த ஆண்டும் அக்டோபரில் தொடங்க திட்டமிட்டமுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியும் நடிகர் கமல்ஹாசன் அவர்களே இந்த வருடமும் தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது.
இன்னும் ஒரு மாதமே நடுவில் இருப்பதால் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதுடன், போட்டியாளர்களின் தேர்வும் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த 5-வது சீசனில் புதுவிதமான டாஸ்க்குகளை கொடுக்க பிக்பாஸ் தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளதாகவும், தொலைக்காட்சி பிரபலங்கள் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் இதில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் கொரோனா தடுப்பூசி 2 தவணையையும் செலுத்தியாக வேண்டும் என்று நிபத்தனை விதித்துள்ளனர்.
தற்போது சில புகைப்படங்களும் இணையத்தில் லீக்காகி உள்ள நிலையில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை அளித்துள்ளது. அதுபோக.. அவர்கள் எதிர்ப்பார்த்த சிலர் இந்த பட்டியலில் இல்லையென்றும் வருத்தப்பட்டுள்ளனர்… மேலும்.. இன்னும் சில முக்கிய பிரபலங்களும். களம் இறங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…