வானொலி துறையில் இலங்கையில் விரல் விட்டு எண்ண கூடியவர்கள் மட்டுமே சாதனை படைத்துள்ளார்கள்.
அந்த வகையில் ஸ்டார் தமிழ் பணிப்பாளர் நவா அவர்களை சொல்லியே ஆக வேண்டும்.
சூரியன் வானொலியில் பலரை அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சாரும்.
தற்போது ஸ்டார் தமிழ் வானொலியில் ஏராளமான புதிய அறிவிப்பாளர்களை அடையாளப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் இன்று பிரசாந்தன் அறிமுகமாகியுள்ளார்.இளையவர்களுக்கு மிகவும் பிடித்த குரல்களான அனாமிகா மற்றும் பிரசாந்தன் வழங்கிய நிகழ்ச்சி அருமை.
ஸ்டார் தமிழ் குடும்பத்திற்கு நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்