ராப் இசைக்கலைஞர் சிவி லக்ஸின் இசை மற்றும் வரிகளில் உருவாகிய “மறுபிறவி” எனும் பாடல் (lyrical video) அண்மையில் வெளியாகியது. ஏழு (07) பாடகர்கள் இணைந்து இதில் பணியாற்றியுள்ளமை சிறப்பம்சமாகும்.
அந்த வகையில் பாடகர்களான பவிதன் ராஜசேகரம், திசோன் விஜயமோகன், பிருத்விராஜ், ஷரத்குமார், சிவி லக்ஸ் மற்றும் பாடகிகளான சுவர்ணா, ஜெனிஃபர் சாரா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.
CJ Photography சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தப் பாடலுக்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, டிசைன்ஸ் ஸ்ரூடியோ லைக் ஷரத்குமார், பாடல் ஒலிக்கலவை ஷமீல் ஜே. பாடலில் நடிகர் பாரதனும் தோன்றி நடித்துள்ளார்.