அரசாங்கம் தன்னிச்சையாக எரிபொருள் விலையை அதிகரித்து மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (22) காலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்திலிருந்து பாராளுமன்றம் வரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வாகனப் பேரணி மூலம் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வருகை தந்ததுடன் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பல சுவாரஷ்யமான விடயங்கள் இடம்பெற்றது.
முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ஹர்ஷ டி சில்வாவுடன் இணைந்து டிமோ பட்டாவில் பாராளுமன்ற சுற்று வட்டம் வரை வந்தார் .