கிரிஷாந்த் ஸ்ரீயின் இயக்கத்தில் தயாராகும் ஈழத்தின் மிக முக்கியமான சினிமா மாற்றமாக MotherZ குறுந்திரைபடம் அமையப்போகிறது.
இலங்கை குறும்திரைப்படங்களில் முதன் முதலில் வெளிவரவிருக்கும் #zombie குறுந்திரை இதுவே என்பதில் படக்குழு பெருமை கொள்கிறது.
கிரிஷாந்த் ஸ்ரீ தனது முகப்புத்தக பதிவில் சில விடயங்களை பதிவிட்டுள்ளார்.
ஈழத்தில் எமது படங்களை செய்வதற்கான மனித வளமோ, தொழில் நுட்பமோ இல்லை என்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன்.
இங்கு அனைத்து வளங்களும் உண்டு. உண்மையில் சினிமா உருவாக்கத்திற்கு சிறந்த நாடு இதுவே.
இங்கு அதன் சாத்தியத்தன்மை பற்றிய கேள்விகள் உங்களிடம் இருக்கலாம்.
என்று தனது முகப்புத்தக பதிவில் தெரிவித்துள்ளார்.