பனைமரக்காடு.
“பனைமரக்காடு” தனது முதலாவது பெறுமதிமிக்க சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விருதொன்றை வென்றுள்ளது.
NTFF. 10ஆவது “தமிழர் விருது”
Best_Director_Award –
தமிழ் முழுநீளத் திரைப்படங்கள்- புலம், தாயகம் பிரிவில் இந்த பெறுமதியான பெருமையைப் பெற்றிருக்கிறது.
இது வரை எந்தத் திரைப்படத்திற்காகவும் தேசியத் தலைமையின் விருதுகளைத் தவிர வேறெந்த விருதையும் பெற்றிருக்கவில்லை. போட்டியிட்டிருக்கவும் இல்லை.
பொதுவாக திரைத்துறை சார் பங்களிப்புக்கான விருதுகளையே பெற்றுள்ளேன்.
அத்துடன் ஈழத்தில் குறும்படங்களுக்கான போட்டிகளை ஏற்பாடு செய்து அவற்றில் விருது வழங்குநனாக இருந்துள்ளேன்.
பல் வேறு திரைப்படப் போட்டிகளில் நடுவராகவும், விருது வழங்கும் பிரமுகராகவும் கலந்து கொண்டிருக்கிறேன்.
ஆனால் இந்த NTFF 10வது விழாவில் ஒரு பெறுமதியான விருதை வென்றுள்ளோம்.
சிறந்த_திரைப்பட_இயக்குனர்.
கடந்த 10 வருடங்களாக தமிழுக்கு என்றொரு சிறப்பு அடையாளத்தை ஏற்படுத்தி “தமிழர் விருது” என்பதை சர்வதேசத் திரைத்துறையே அங்கீகரிக்கச் செய்துள்ளது NTFF.
அதனால் இந்த விருது என் வாழ் நாளில் பெற்ற சிறந்த, அனைத்துலக மதிப்பு மிக்க ஒன்றாகவே கருதுகிறேன்.
NTFF.
உத்தியோகபூர்வ விருதுப் பட்டியலைப் பார்க்க,
https://ntff.no/ntff-2019-the-winners-of-feature-film-tami…/