ஈழத்து சினிமாவை வளர்க்க ”பாஸ்” கொடுத்த கெளரவம்…சல்யூட்

எமது தேசப்புதல்வர்கள் தாங்கள் நேசித்த துறைகளில் நிறையவே சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.

அந்த சாதனையாளர்களை உற்சாகப்படுத்தி மென்மேலும் அவர்கள் சார்ந்த துறைகளில் வெற்றிக்கனிகள் பறிக்க வழி செய்யும் விதத்தில் தட்டிக்கொடுத்து பாராட்டும் விழா ஒன்றை நடத்த IBC பாஸ்கரன் கந்தையா முடிவு செய்தார்.

ஆளுமையாளர்கள் ஐம்பது பேரை இவ்வாண்டில் தெரிவு செய்து அவர்கள் கரங்களில் விருது கொடுத்து மகிழ்வித்து மாண்பேற்றும் விழா ஒன்றினை 27-02-2019 நேற்று யாழ் வலம்புரி விடுதியில் நடத்தினார்.

இவ்விழாவில் எமது இயக்குனர் கேசவராஜன் நவரத்தினம் அவர்களுக்கு சாதனையாளர் விருது கிடைத்தது .

விருது கிடைத்த பின்னர் இயக்குனர் கேசவராஜன் நவரத்தினம் தனது முகப்புத்த்கத்தில் இவ்வாறு பதிவிட்டார் .

அற்புதமான அரிய அனுபவம். நான் கால் தொட்டு வணங்கும் ஒரே ஆளுமை இசைவாணர் கண்ணன் (கோபாலக்கிருஸ்ணன்) அவர்கள்.

அவரது புதல்வர்களில் ஒருவரான முரளி என் நலம் விரும்பும் நண்பர். மற்றய புதல்வர் தர்சன் என் “அம்மா நலமா” திரைப்படத்தின் இசையமைப்பாளர்.

இத்தகைய மேதை கண்ணன் மாஸ்டரின் காலை வணங்கி அவரின் கையால் பெற்ற விருது என் வாழ்வில் உன்னதமானது.

எத்தகைய மேதைகளுடன் வாழ்கிறோம்..!

வாழ்க்கையும் வரலாறும் தந்த உன்னத தருணம் இது.

யார் சொன்னது நாம் தோற்றுவிட்டோம் என்று?

நமது ஈழத்து சினிமா படைப்பாளியை கெளரவித்த
IBC பாஸ்கரன் கந்தையா அவர்களுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!