பியூமி ஹன்சமாலி குழுவினரை தனிமைப்படுத்தப்படுவதைத் தடுக்க தான் உத்தரவிடவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்று தனது ஊடகச் செயலாளர் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில், தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட நாளில் “பியூமி ஹன்சமாலி என்று ஒரு அழைப்பும் மற்றும் சந்திமல் ஜெயசிங்க என்ற பெயரில் இருந்தும் இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அமைச்சர் ஒப்புக் கொண்டார்.
பொலிஸார் தனிமைப்படுத்தலுக்குச் செல்லும்படி கேட்டபோது அவர்கள் எதையும் எடுக்காததால் கூடுதல் உடைகளை எடுக்க அனுமதிக்குமாறு இருவரும் கேட்டுக்கொண்டனர்.
அதன்படி, பஸ் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, மேலும் இக் குழு பஸ்ஸில் இருக்கும்போது அவர்களுக்கு உடைகள் மற்றும் பிற நலத் தேவைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதை நிறுத்தவோ அல்லது அவர்களின் பஸ்ஸை திருப்பி விட உத்தரவிடவோ தலையிடவில்லை என்று அமைச்சர் கூறினார்.